FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 23, 2016

'சலாம்.. எனது வியத்தகு ரசிகர்'- விக்ரமின் நெகிழ்ச்சி அனுபவம்

23.02.2016
மலையாள தனியார் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் விழாவில், நடிகர் விக்ரமின் அணுகுமுறையால் அவரை நெருங்கிய ரசிகர் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக நெகிழ்ந்தனர்.

கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் விக்ரம். 'ஐ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

அந்த விருது வழங்கும் விழாவில் தன்னைக் காண வந்த ரசிகர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது பாதுகாவலர்களிடம் இருந்து அந்த ரசிகரை விடுவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்த வீடியோ தொகுப்பு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் நடிகர் விக்ரமின் இந்த செயலைப் பாராட்டி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மையில், அந்நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விக்ரம் தரப்பில் விசாரித்த போது, "பாலக்காட்டில் இருக்கும் அந்த ரசிகர் பெயர் சலாம். அவர் விக்ரமின் தீவிரமான ரசிகர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த ரசிகர் எப்படி பின்னால் இருந்து அனைவரையும் கடந்து வந்தார் என்பது தெரியவில்லை.

விக்ரமை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் சலாமை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். இதனை சற்றும் எதிர்பாராத விக்ரம், பாதுகாவலர்களிடம் பேசி அவரை விடுவித்தார்.

அதனைத் தொடர்ந்து சலாமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். செல்ஃபி எடுத்து முடித்தவுடன், விக்ரமை சலாம் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விக்ரமின் இந்தச் செயலுக்கு அவருடன் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி, விக்ரமை 'வியத்தகு நடிகர்' என வெகுவாகக் கொண்டாடி வருவதை அவரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்" என்று சொல்லி, அந்த செல்ஃபீயை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் விக்ரம்.

No comments:

Post a Comment