FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, February 25, 2016

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி

25.02.2016
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

கடனுதவி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 266 பேருக்கு மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டி கடை, கணினி மையம், பொது வியாபாரம் மற்றும் பலதரப்பட்ட தொழில்கள் செய்வதற்காக ரூ.2 கோடியே 41 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டது.

இந்த கடனுதவி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக தலைவர் பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை இந்த கழகத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய குறையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இட ஒதுக்கீட்டை அந்த அளவுக்கு வழங்க முடியுமோ அதை வழங்குமாறு தலைமை செயலருக்கு கூறியுள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அரசுப்பணி மட்டுமின்றி சிறிய தொழில் செய்யவும் கடனுதவி அளித்து ஊக்குவித்து வருகின்றோம். 50 சதவீதத்திற்குள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க முடியும். அவர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி வளர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment