FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, February 6, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமையை பறைசாற்றும் 'சாமர்த்தியா -- 2016'

04.02.2016, பெங்களுரு,: மாற்றுத்திறனாளிகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணம், நம்மில் பலரிடையே உள்ளது. இதை மாற்றி, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா - 2016' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவை, இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை, 8:45 மணிக்கு சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கை அசின் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாளான, நாளை காலை, 10:30 மணிக்கு, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
சர்வதேச ஆசிய பசிபிக் மாற்று திறனாளிகள் உரிமைகள் அமைப்பின் மண்டல அலுவலர் ராஜிவ் ரத்துாரி துவக்கி வைக்கிறார்.
மாலை, 5:00 மணிக்கு, சாதனை படைத்த, 15 கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா, 15 ஆயிரம் ரூபாயும், கேடயமும் கிருஷ்ணய்ய செட்டி அன்ட் சன்ஸ் வழங்குகிறது.
லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை இயக்குனர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியின் போது, இன்று காலை, 9:30 மணிக்கு மாற்றுத்திறனாளியான ஸ்வப்னா, கால் விரல்கள் மூலம் ஓவியம் வரைந்து, தன் திறமையை வெளிப்படுத்து கிறார்.
இரு நாள் நிகழ்ச்சியிலும் மாற்றுத்திறனாளிகள் தயார் செய்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment