FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, February 18, 2016

மாற்றுத்திறனாளி மரணம் குறித்து பேச அனுமதி மறுப்பு: 5 கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, பிப். 18–
சட்டசபையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் பேசி முடித்த பிறகு தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க. புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் சார்பில் போராட்டத்தின் போது இறந்த மாற்றுத் திறனாளி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி கேட்டனர்.

இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் அந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபைக்கு வெளியே தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாபு முருகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகள் 6 அம்ச கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்கள் மீது இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி மரணம் அடைந்து விட்டார். அதுபற்றி பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச 22 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால் எந்த பிரச்சனை குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தங்கவேல் கூறியதாவது:–

இறந்த மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டோம். அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் 110–வது விதியின் கீழ் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் தற்போது சென்னைக்கு மட்டும் மூத்தகுடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் அதுவும் 10 டோக்கன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த அறிவிப்பை கடைசி நாளில் அறிவிக்கிறார்கள் என்றார்.

இதே போல விஜயதாரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் வெளிநடப்புக்களுக்கான காரணங்களை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment