FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 9, 2016

கைதிகளை போல சித்ரவதை செய்த போலீசார்: மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு


09.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை முதலே 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜெயலலிதா செல்லும் காமராஜர் சாலையில், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அங்கு சாலையில் இரண்டு புறங்களிலும், எழிலக வளாகத்திற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 10 மணி அளவில் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் காமராஜர் சாலையில் அமர முற்பட்டனர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் ஆவின் பாலகம் நுழைவு வாயில் வழியாக அழைத்துச்சென்றனர்.

இதைத் தொடர்ந்து, வேளாண்துறை அலுவலகம் வழியாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் விருந்தினர் மாளிகை வளாகத்தில் முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


4 மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை வெளியே செல்ல விடாமல் நான்கு நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததாலும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், போலீசார் கேட்டை திறக்க மறுத்தனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கயிறால் கட்டப்பட்டிருந்த கேட்டை இழுத்து திறக்க முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்கை போலீசார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாற்றுத்திறனாளிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிலர் காமராஜர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக் கூறும்போது, எங்களை கைதிகளை போல போலீசார் சித்ரவதை செய்தார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து உறுதிமொழி தரும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 600 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இதனால், 400-க்கும் மேற்பட்டோர் மதிய உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர் என்றார்.

No comments:

Post a Comment