FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, February 25, 2016

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு பெண் மருத்துவருக்குப் பிடியாணை

ஈரோடு, 25 February 2016,
ஈரோடு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாத அரசுப் பெண் மருத்துவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (50), விவசாயத் தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூவாயி (30). பூவாயி காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பூவாயைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ஸ்ரீரங்கன் நெருங்கிப் பழகினாராம். அதன் பின்னர், ஸ்ரீரங்கன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூவாயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பூவாயியிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் வைஷ்ணவியை சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு நீதிபதி திருநாவுக்கரசு 5 முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், 5 முறையும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு வைஷ்ணவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஆஜராகவில்லை.

அதையடுத்து, சாட்சியம் அளிக்கத் தவறிய மருத்துவர் வைஷ்ணவிக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment