கடலூர், 01 February 2016
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர், டிசம்பர்-3 இயக்கத்தினர், மாவட்ட பார்வையற்றோர் நலச் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.
டிசம்பர்-3 இயக்க மாநிலத் தலைவர் என்.தீபக், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையும், அதற்கென தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். ஊனத்திற்கு ஏற்ற வகையில் உதவித்தொகையை ரூ.5ஆயிரம் வரையில் உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் வரவேற்றார். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment