17.02.2016,
6 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும், மற்றும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக நேற்று மாற்றுத்திறனாளிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து இன்று அவர்கள் தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் வழிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று நேற்று அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட திரண்ட போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசு ஊழியர்களான இவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Tamil Media.
No comments:
Post a Comment