FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, February 18, 2016

போராட்டத்தை கைவிடுங்கள்; மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது : ஸ்டாலின்

18.02.2016
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
’’அரசு பணிகளில் மூன்று சதவீத இடஒதுக்கீடு, மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே உதவி, அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுதிறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் அவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

மாற்று திறானாளிகள் போராட்டம் என்றதும் காலை உணவு கூட சாப்பிடாமல் ஓடோடிச் சென்று அவர்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைத்தவர் தலைவர் கலைஞர். கழக ஆட்சியில் மாற்று திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் "ஆதரவற்ற மாற்றுதிறனாளிகளுக்கு" மட்டுமே உதவித்தொகை என்று மாற்றப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் தங்கள் பத்து அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி போராடியவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இது வரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக் கட்டாக காவல்துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது. இன்றைக்கு அதிமுக அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அதிமுக அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்று திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கழக அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது உங்கள் கோரிக்கைகளை கைவிடுங்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். கழக அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’’

No comments:

Post a Comment