FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 2, 2016

ஒடிசாவில் பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

புவனேஸ்வர், பிப்.2-
ஒடிசா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு அவரது தாயை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தின் ஜமாஜரி கிராமத்தை சேர்ந்த அந்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த அதே பகுதியை சேர்ந்த சுஜித் குமார் டெஹூரி(26) என்பவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

வெளியே போயிருந்த அந்த பெண்ணின் தாயார் மாலையில் வீடு திரும்பினார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் அவர் அழுதபடி ஜாடை மொழியில் கூறினார். இதையடுத்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார், சுஜித் குமாரை தேடிச்சென்று நியாயம் கேட்டபோது, நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் உன்னையும் உன் மகளையும் கொன்று விடுவேன் என அவர் மிரட்டினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பேச்சுத்திறனற்ற இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளி சுஜித் குமாரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment