நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா கலந்துக்கொண்டு 370 பேருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.
அப்போது நாட்டார் வழக்காட்சியியல் துறையில் ஆய்வு மேற்கொண்ட பெரியதுரை என்ற மாற்றுத்திறனாளி மாணவர், உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி தனக்கு அளித்த பட்டத்தை ஆளுநர் ரோசையாவிடம் திருப்பி அளித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கக் கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment