6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 4 நாட்டகளாக எமது கூட்டியக்கம் சால்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், முக்கிய கோரிக்கைகளின் ஒன்றான 40 சதவீத ஊனமிருந்தால், உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், ஆதரவற்றோராக இருந்தால்தான் உதவித்தொகை தரப்படும் என்ற விதியை ரத்து செத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன், சட்டப்படியான 3 சதவீத பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதை கண்காணிக்க அரசு தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழுவும், சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை எமது கூட்டியக்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எங்களுடைய கூட்டியக்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தினாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒறறுமையாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இந்த போராட்டம் வெற்றி அடைய எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
இந்த போராட்ட களத்தில் உயிரை இழந்த வேலுhர் மாவட்ட மாற்றுத்திறனாளி திரு.குப்புசாமி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியோடு நினைவு கூறுகிறோம். அவருடைய குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்துடன் நாங்கள் நடத்தி வந்த இந்த தொடர் போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.
பா. ஜான்சிராணி தலைவர்-TARATDAC
டி.எம்.என். தீபக் தலைவர்,டிச-3 இயக்கம்
பி. மனோகரன் இயக்குநர்-NFB
பி. மனோகரன் இயக்குநர்-NFB
இ.கே. ஜமால் அலி, தலைவர்-State Deaf Fedn
good news ...
ReplyDelete