FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Saturday, October 31, 2015

Deaf People are changed to normal person by a majestic doctor. Please see this video.



5th MISS & MISTER DEAF INDIA On 22nd to 25th January 2016


மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

30.10.2015, ராமநாதபுரம்:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய், 6 முதல் 8 வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
இதனை பெற இதர அரசு துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. தகுதி யுள்ளோர் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும், என்றார்

Thursday, October 29, 2015

கீதாவுக்கு உரிமை கோரும் புதிய பெற்றோர்: குழப்பம் நீடிக்கிறது

அலிகார், 29 October 2015
சிறு வயதில் காணாமல் போன நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இளம்பெண் கீதா, தங்களது மகள் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியர் புதிதாக உரிமை கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர், கீதா தங்களது மகள் எனக் கூறியிருந்த நிலையில், புதிய தம்பதியர் உரிமை கோரியிருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம்பெண் கீதா தனது 8-ஆவது வயதில் பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தன்னந்தனியாக தவித்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அங்குள்ள அறக்கட்டளை ஒன்றின் பராமறிப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வந்த கீதாவை மத்திய அரசு அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
அந்தப் பெண் தங்களது மகள் என பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர் உரிமை கோரினர். இதையடுத்து, அவர்களது மரபணு மாதிரிகளையும், கீதாவின் மரபணு மாதிரியையும் சேகரித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் அருகேயுள்ள உத்ரா கிராமத்தைச் சேர்ந்த பாகுல் சிங் என்பவர், சிறு வயதில் காணாமல் போன தனது மகள் டோலிதான் கீதா என்று உரிமை கோரியுள்ளார்.
இதை நிரூபிக்கும் வகையில் மரபணு சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீதா தங்களது மகள் என அடுத்தடுத்து புதிய புதிய தம்பதியர் சொந்தம் கொண்டாடுவதால் அவருடைய உண்மையான பெற்றோர் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

சைகை மொழியில் ஜன கண மன பாடிய இந்தியாவின் செல்ல மகள் கீதா

இந்தூர், அக்.29-
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று அவர் அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா திரும்பினார்.

செல்லும் இடம் எங்கும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கீதாவுக்கு தங்கள் அன்பை வாழ்த்துக்களாக தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியிருக்கும் கீதா, நேற்று இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் அபிநயம் செய்து, தன்னைப் போன்ற குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பரிசாய் பெற்றார்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா பஞ்சாபி வர்மா, கீதா தேசிய கீதத்தை இப்படிப் பாடுவது இதுவே முதல் முறை என்றும், கீதாவை இங்குள்ள சூழலுடன் ஒன்றச் செய்வதே எங்கள் தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

16 சிறப்புப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை: பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

29.10.2015, சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை,கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன. இதில், 16 பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம், பல ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அத்துடன், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின், 60 சதவீத பணியிடம், காலியாகவே உள்ளன. சிறப்பு பள்ளிகள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, சிறப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் பதவியும், பல ஆண்டாக, காலியாக இருப்பது வேதனையான விஷயம். அந்த இடத்தில், சிறப்பு பயிற்சி முடித்தவரை நியமிக்க வேண்டியதற்கு பதிலாக, தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மணிமாறன், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்றோருக்கு, பிரைலி புத்தகம் மூலம், கல்வி போதித்தல், காது கேளாதோருக்கு, சைகை மூலம், பாடம் கற்பித்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் கல்விபயிலும் வழிமுறை, மணிமாறனுக்கு, தெரியாது என்பதால், அவருக்கு, சிறப்புப்பள்ளிகளை கண்காணிப்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறப்புப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் நிலையில், அவர்களது கல்வித்தரம் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாநில செயலாளர் நம்பிராஜன் கூறியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிக்கான, ஐந்து மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் உள்ளார். இதர, நான்கு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரே கிடையாது. கடந்த, 2014 அக்.14ல், தஞ்சை பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, கட்டிட வசதிக்காக, 70 லட்சம் ரூபாய், போதிய ஆசிரியர்களை நியமிக்க, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இந்த நிதியை பயன்படுத்தி கட்டிடமும் கட்டவில்லை; ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை. தமிழகத்தில், இந்த பள்ளியில், முதன் முறையாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டது. அதற்கான, ஒரு ஆசிரியர் கூட நியமனம் செய்யாதது வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டி சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை, அக்.29- 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியோருக்கு தடகள போட்டி அடையாறில் உள்ள செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

தூர ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள்ஜம்ப் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதாப்குமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 28, 2015

வடபழனி காவல் நிலையத்தில் வாய் பேச இயலாத சிறுவன்

வாய் பேச இயலாத இந்தச் சிறுவன், தற்போது வடபழனி காவல் நிலையத்தில் இருக்கிறான். விவரம் எதுவும் வெளிப்படுத்தத் தெரியவில்லை. அடையாளம் தெரிந்தால் 9710919069 என்ற எண்ணில் s.i. ஐத் தொடர்பு கொள்ளலாம் - 26 அக், 2015.

ஓவியக் கலையில் கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தப்படும்: ஓவியர் சந்துரு

திருநெல்வேலி, 28 October 2015
ஓவியக் கலையில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் ஓவிய நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாக ஓவியர் சந்துரு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஓவியர் சந்த்ரு அளித்தப் பேட்டி: ஓவியம் பயில விரும்புவோர் சென்னை, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓவியக் கலையில் ஆர்வமுள்ள தென்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் அவ்வை முளரி நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் அடிப்படை கல்வி கற்கின்றனர். தொடர்ந்து உயர்கல்வி பயிலாமல், கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இக்கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஓவியக் கலை பயில்வோருக்கு உலக அளவில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் ஓவியர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இயல்பாக நம்மை சுற்றியுள்ள இயற்கையினை நேசிக்க வேண்டும். மனிதனை சுற்றியுள்ள சூழலை ஓவியங்களாக பதிவு செய்ய வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை வன வளங்கள் போன்ற மனதுக்கு பிடித்த இடங்கள் அமையந்துள்ளன. இன்றைய சூழலில் பள்ளிகளில் கூட ஓவியர் ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகிறது.

எனவேதான், ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. 3 வருட டிப்ளமோ படிப்பும், ஒரு வருட படிப்பும் உள்ளது. இதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 15 பேர்

உள்பட 20 பேர் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

பேட்டியின்போது, திரைப்பட இயக்குநர் ஜனநாதன், திரைப்பட எடிட்டர் லெனின், தமிழ்பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி. ரமேஷ்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

மாவட்ட தடகளப் போட்டிகள்: மாற்றுத்திறனாளிகள் 266 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி, 28 October 2015
பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் 266 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கைகாள் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதோர் என 4 பிரிவுகளாக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி, நின்ற நிலையில் குண்டு எறிதல் உள்ளிட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 266 பேர் பங்கேற்றனர்.

போட்டியினை திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, வணிகவரித்துறை இணை ஆணையர் கார்த்திகாயினி ஆகியோர் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. பிராங்க்பால்ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவெறும்பூரில் அக்.31-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி, 28 October 2015
திருவெறும்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 31-ம் தேதி நடைபெறுகிறது.

திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.

தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

இதுநாள்வரை தேசிய அடையாள அட்டை பெறாத திருவெறும்பூர் வ்டடாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 3 புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடனும், ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tuesday, October 27, 2015

Geeta a 'symbol of India-Pakistan unity': President Mukherjee

27.10.2015, New Delhi: A day after returning to India from Pakistan where she was stranded for years, speech and hearing impaired Geeta met President Pranab Mukherjee -- who called her "a symbol of India-Pakistan unity" -- and Chief Minister Arvind Kejriwal and took a ride on Delhi Metro.

"You are the daughter of both our countries, a symbol of India-Pakistan unity. God has listened to your prayers," Mukherjee told the 23-year-old when she called on him at Rashtrapati Bhavan.

A Rashtrapati Bhavan statement said Mukherjee blessed Geeta, a Hindu who strayed into Pakistan when she was around 11 years old in 2003. Pakistan Rangers promptly handed her over to the Edhi Foundation that took care of her since then.


President Pranab Mukherjee. PTI

Unable to explain who she was and from where she came, Geeta began living in Pakistan, and grew from a teenager to a young adult.

The president also thanked Bilquis Bano Edhi and the Edhi Foundation for their good work in Pakistan.

Before meeting the president, Geeta met Delhi Chief Minister and AAP leader Arvind Kejriwal, who asked her about her life in Pakistan and how she strayed into that country.

At both meetings, Geeta was accompanied by members of Edhi Foundation.

Geeta, who interacted with everyone with the help of a facilitator, later took a ride on Delhi Metro, travelling from the Civil Lines station in the city's north to Patel Chowk station in the heart of the capital.

At the Patel Chowk station, she was taken around the Delhi Metro museum.

On Monday, Geeta flew into New Delhi on Pakistan International Airlines to begin a new life on her home soil.

Among the first people she called on were External Affairs Minister Sushma Swaraj, who had taken a keen interest on her return, and Prime Minister Narendra Modi.

Modi thanked Bilquis Edhi, wife of Karachi-based Edhi Foundation founder Abdul Sattar Edhi, for taking care of Geeta in Pakistan. He also announced a Rs 1 crore rupee donation for the foundation.

On Tuesday, the NGO declined to accept the money.

"Edhi has thanked Modi and politely declined to accept his announced financial help," the Dawn quoted Edhi Foundation spokesman Anwar Kazmi as saying.

"What the Edhi family has done is too priceless to be measured but I am happy to announce a contribution of Rs.1 crore for their foundation," Modi had tweeted on Monday.

Edhi Foundation is a social welfare organisation known for its extensive social work.

Special students from Jaipur rejoice at Geeta's homecoming

27.10.2015, JAIPUR: Speech and hearing impaired students of Seth Anandi Lal Poddar Deaf and Dumb School danced and burst crackers on Monday.

The celebrations started after their teachers informed them about the arrival of Geeta, the speech and hearing impaired girl who had accidentally crossed border to Pakistan. Since most of the 750 students at the school are curious to meet Geeta, the school administration has promised them invite her soon.

These students have formed a WhatsApp group 'Bajrangi Bhaijaan' on which they have been sharing Geeta-related developments since her story unfolded.

On TOI's request, Kamlesh Sharma, an interpreter who knows the sign language, invited Khushbu Bana, a speech and hearing impaired student, to share her feelings on Geeta's homecoming.

"She is saying that she is happy to see a film story becoming real. She and other students of the school had watched Bajrangi Bhaijaan movie. She says that seeing this kind of thing in real life is nothing less than a miracle," said Sharma while sharing what Khushbu felt on Geeta's arrival.

In between the conversation, Madan Singh, another student, drew Sharma's attention and urged to say something. "He is saying that he wishes that either the school administration should invite Geeta to their school or some of the kids may be invited by the government of India so that they can meet her. He wishes to know what all Geeta went through while staying in Pakistan," Sharma added.

Like Khushbu, other students were dancing on the beats of dhol and bursting crackers on the school premises. "Some of our students have made a WhatsApp group in which they were sharing messages on the developments relating to Geeta's return from Pakistan. They all had liked the film Bajrangi Bhaijaan and now they are feeling happy to know about the safe return of Geeta," said Yogendra Singh Naruka, in-charge of the school. Naruka added that since many of them read newspapers, they are well aware of the developments related to Geeta.

"Aaj humarey bachchey bahut khush hain (Today, our kids are very happy)," said Naruka while pointing towards a student who was busy in bursting crackers.



AIIMS doctors to take Geeta’s DNA samples to identify parents

New Delhi, Oct 26 : The All India Institute of Medical Sciences (AIIMS) has deputed two doctors to collect the DNA samples of 23-year-old Geeta, who has returned to India from Karachi almost after 15 years, to determine her parentage and the results will be known “after 15-20 days”. ”We have deputed two doctors to collect the DNA samples of Geeta from the hotel where she is staying. These samples will be sent to the AIIMS Forensic lab and Central Forensic Science Laboratory (CFSL) for carrying out necessary tests to determine her parentage,” said Dr Sudhir Gupta, Head of AIIMS Forensics Division.

Gupta said that they have already collected the samples of the family which claimed Geeta as its own on October 24 after the Ministry of External Affairs wrote to the hospital. The Ministry had asked it to collect samples for DNA test to confirm if Janardhan Mahato, who claims that Geeta is his first born Heera, is indeed her father.

“We have already collected the samples from her reported parents after we received a letter from the Foreign Ministry to assist in her DNA test,” said Gupta adding that the samples have been sent to AIIMS Forensic lab and CBI’s Forensic lab. ”We are fast tracking this test and the results will be out in 15-20 days,” he added.

Geeta, a deaf-mute girl, travelled from Karachi to Delhi this morning, nearly 15 years after she accidentally crossed over to Pakistan as a child. She is accompanied from Karachi by the Edhi family, who run a charitable foundation and looked after her all these years. Geeta will soon meet Janardhan Mahato from Bihar, who she earlier this month had identified as her father from one of the many photographs sent to her by the Indian High Commission in Islamabad.

Bilquis Edhi tells Modi, thanks but no thanks

MUMBAI: After arriving in India from Pakistan the deaf-mute young woman Geeta met with Indian Prime Minister Narendra Modi and President Pranab Mukherji accompanied by Bilquis Edhi under whose care she had spent the last 13 years in Pakistan.

As a gesture of thanks, Modi announced a donation of Rs 10 million for the Edhi Foundation. However Bilquis Edhi turned down the offer with thanks stating that the Edhi Foundation rules do not allow any donations from government funds.

Addressing a press conference in Karachi, Abdul Sattar Edhi’s son Faisal Edhi also thanked the Indian prime minister and clarified that taking funds from governments is against the foundation’s policy and added that he would be very pleased if the Indian prime minister would spend the amount offered for the welfare of the deaf and mute citizens in India.

கீதா எங்கள் மகள் தான் தெலுங்கானா தம்பதியரால் புதிய பரபரப்பு

27.10.2015, 
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத கீதா 8 வயது சிறுமியாக இருக்கும்போது வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.

லாகூர் ரெயில் நிலையத்தில் கீதாவை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். அங்குள்ள ஒரு அறக்கட்டளை கீதாவை பாதுகாத்து வளர்த்தது.

கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. நடிகர் சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இந்தி படம் பாகிஸ்தானில் வெளியான பின்னர் கீதாவின் கதை வெளியுலகுக்கு தெரிய வந்தது.

அவர் மீது பரிதாபப்பட்ட பாகிஸ்தான் அரசாங்கம் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில் அவளது பெற்றோர் பீகாரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு கீதா நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டார்.

பீகாரில் உள்ளவர்கள் கீதாவின் பெற்றோர்களா? என்பது அறிய அவரது தந்தையின் ரத்தம் மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைககு அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோல் கீதாவின் ரத்த மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதன் முடிவுகள் தெரிந்த பிறகே கீதா அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.

இதற்கிடையே இந்தியா திரும்பிய கீதா எங்களது மகள் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி சொந்தம் கொண்டாடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சம்மம் மாவட்டம் படமடா நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா– கோபம்மா தம்பதிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கள் கூறியதாவது:–

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய கீதா என்ற பெண் எங்களது மகள் ராணி. கடந்த 8–ந்தேதி பத்திரிகையில் அவள் புகைப்படத்தை பார்த்தபோதே அவர் எங்களது மகள் என்று தெரிந்து கொண்டோம்.

15 வருடங்களுக்கு முன் 7 வயது இருக்கும்போது அவள் காணாமல் போய் விட்டாள். அப்போது அவளுக்கு சரியாக பேச்சு வராது. கீதாவின் கண், மூக்கு, முகச்சாயல் எனது மகள் ராணிபோல் உள்ளது.

நாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் டெல்லி சென்று எனது மகளை பார்க்க முடியாமல் இருக்கிறோம். முதல்–மந்திரியோ, அரசியல் தலைவர்களோ எங்களுக்கு உதவி செய்து எனது மகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

கீதா எங்கள் மகள் என்பதை நிரூபிக்க நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உள்பட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள். தங்களது மகளின் சிறிய வயது புகைப்படத்தை அவர்கள் நிருபர்கள் மத்தியில் காட்டினார்கள்.

கிருஷ்ணய்யா தம்பதிகளுக்கு உதவி செய்ய நரசாபுரம் பஞ்சாயத்து தலைவர் மோகன்ராஜ் உதவி செய்ய முன்வந்து உள்ளார்.

புதிய திருப்பம்: கீதாவை சொந்தம் கொண்டாடும் உத்தரப்பிரதேச தம்பதி

லக்னௌ,  27 October 2015

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய மாற்றுத்திறனாளிப் பெண் கீதாவை, தங்களது மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வந்த மாற்றுத்திறனாளி பெண் கீதா நேற்று இந்தியா திரும்பினார். ஏற்கனவே அவரை தங்களது மகள் என்று கூறியுள்ள பிகாரைச் சேர்ந்த ஜனார்த்தன் மஹதோ தம்பதியரை, தனது பெற்றோர் இல்லை என கீதா கூறியிருந்த நிலையில், அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்ராஜ் கௌதம் - அனரா தேவி தம்பதி, கீதா தங்களது காணாமல் போன மகள் என்று சொந்தம் கொண்டாடி உள்ளனர். அவர்கள் அலகாபாத் காவல்துறை ஆணையரிடம் தங்களது மனுவை அளித்துள்ள நிலையில், மகளைக் காண தில்லி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பணம் வேண்டாம்: மோடியின் ரூ.1 கோடி நிதியுதவியை வாங்க பாகிஸ்தான் தொண்டு நிறுவனம் மறுப்பு

கராச்சி, அக்.27- 
மாற்றுத்திறனாளியான இந்தியப்பெண் கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 'எதி' தொண்டு நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர வழங்கிய ரூ.1 கோடி நிதியுதவி வாங்க அத்தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி கீதா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்றுவிட்டார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கராச்சியில் உள்ள 'எதி' என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து கீதா இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் எதி தொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் கீதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் வந்த 'எதி' தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரும் அரசு விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மோடி, அவர்களின் கருணைக்கும் அன்புள்ளத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவர்களின் சேவை விலை மதிப்பற்றதெனினும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

இந்நிலையில் 'எதி' தொண்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்வர் கஸ்மி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “ எதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் சத்தார் எதி, திரு.மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அறிவித்தது நிதி உதவியை பணிவுடன் ஏற்க மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பினார் கீதா

பாகிஸ்தானில் இருந்துநாடு திரும்பிய இளம்பெண் கீதா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். கீதாவைப் பாதுகாத்து வளர்த்த எதி குடும்பத்தினரை எவ்வளவு அதிகமான வார்த்தைகளில் பாராட்டினாலும் அது போதாது, அன்புக்கும், கருணைக்குமான தூதுவர்களாக அவர்கள் திகழ்கின்றனர் என்றார்.




















பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுப்பு

27.10.2015, புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த நிதியுதவியை ஏற்க பாகிஸ்தானை சேர்ந்த எதி தொண்டு நிறுவனம் மறுத்து விட்டது.

சிறுவயதில், இந்தியாவில் இருந்து, வழி தவறி பாகிஸ்தான் சென்ற, மாற்றுத் திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியா திரும்பினார். நரேந்திர மோடி, நேற்று மாலை கீதாவை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த, 'எதி பவுண்டேஷனுக்கு' ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக, பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுத்துவிட்டது. எந்த நிதி மற்றும் நன்கொடையை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அந்த நிறுவனம், நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அந்த நிதியை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு பயன்படுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.