சேலம்: 13 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கி சிறப்பித்தார்.
சேலம் கூட்டுறவு வங்கி கடந்த 110 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இட்டு வைப்புகள் மட்டும் ரூ.358.26 கோடி உள்ளது. கடன் நிலுவை ரூ.241.39 கோடியும், நடைமுறை மூலதனம் ரூ.375.93 கோடியும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2014-15 ஆம் ஆண்டுகளில் 19 நபர்களுக்கு ரூ.20.30 லட்சம் கடன் வழங்கி சாதனை செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்ததால், சேலத்தில் நடந்த மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்.
இந்த விருதை வங்கித் தலைவர் எம்.துரைராஜ், பொது மேலாளர் என்.நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment