புது தில்லி, 05 October 2015
தாய்வான் நாட்டில் நடைபெறும் ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தில்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்கள் 40 பேர், விசா கிடைக்காததால் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டைத் தவிர, பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெற்று வரும் போது கொண்டாடும் மத்திய அரசு, அவர்களுக்கு போதிய ஆதரவு அளிப்பதில்லை என்பது பல காலமாக இருக்கும் குற்றச்சாட்டுகள்.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், புது தில்லி விமான நிலையத்தில் தாய்வான் விசா கிடைக்காததால், மத்திய அரசு தங்கும் வசதி செய்து கொடுக்காத நிலையில், 40 மாற்றுத்திறனாளி இந்திய வீரர்கள், குருத்வாரா வழிபாட்டுத் தலம் அருசே சாலையோரம் படுத்து உறங்கியுள்ளனர்.
பிறகு, அவர்களுக்கு விசா கிடைத்து தாய்வான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment