FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 29, 2015

16 சிறப்புப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை: பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

29.10.2015, சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை,கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன. இதில், 16 பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம், பல ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அத்துடன், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின், 60 சதவீத பணியிடம், காலியாகவே உள்ளன. சிறப்பு பள்ளிகள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, சிறப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் பதவியும், பல ஆண்டாக, காலியாக இருப்பது வேதனையான விஷயம். அந்த இடத்தில், சிறப்பு பயிற்சி முடித்தவரை நியமிக்க வேண்டியதற்கு பதிலாக, தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மணிமாறன், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்றோருக்கு, பிரைலி புத்தகம் மூலம், கல்வி போதித்தல், காது கேளாதோருக்கு, சைகை மூலம், பாடம் கற்பித்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் கல்விபயிலும் வழிமுறை, மணிமாறனுக்கு, தெரியாது என்பதால், அவருக்கு, சிறப்புப்பள்ளிகளை கண்காணிப்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறப்புப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் நிலையில், அவர்களது கல்வித்தரம் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாநில செயலாளர் நம்பிராஜன் கூறியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிக்கான, ஐந்து மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் உள்ளார். இதர, நான்கு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரே கிடையாது. கடந்த, 2014 அக்.14ல், தஞ்சை பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, கட்டிட வசதிக்காக, 70 லட்சம் ரூபாய், போதிய ஆசிரியர்களை நியமிக்க, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இந்த நிதியை பயன்படுத்தி கட்டிடமும் கட்டவில்லை; ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை. தமிழகத்தில், இந்த பள்ளியில், முதன் முறையாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டது. அதற்கான, ஒரு ஆசிரியர் கூட நியமனம் செய்யாதது வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment