அக்டோபர் 16,2015,புதுடெல்லி
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமி கீதா 15 வருடத்திற்கு முன்பு ரெயிலில் வழிதவறி தனியாக லாகூர் சென்றார். அங்கு தவித்த அவரை அங்குள்ள எத்தி அறக்கட்டளையினர் மீட்டு கராச்சிக்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். தற்போது 22 வயதுள்ள மாற்றுத்திறனாளி பெண் கீதா பாகிஸ்தானில் இருப்பது இந்திய வெளியுறவு துறைக்கு தெரியவந்தது.
இது குறித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று கூறுகையில், கீதாவை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. விரைவில் அவர் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மரபணு சோதனை நடத்தி உறுதி செய்யப்பட்ட பிறகே அவரை பெற்றோரிடம் ஒப்படைப்போம் என்றார்.
அப்போது வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் தெரிவிக்கையில், கீதாவின் பெற்றோர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 புகைப்படங்களை அவருக்கு அனுப்பினோம். அதில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மரபணு சோதனையில் கீதாவின் பெற்றோரை அடையாளம் காண முடியாவிட்டால் டெல்லி அல்லது இந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றார்.

No comments:
Post a Comment