தருமபுரி, 18 October 2015
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 315 மாணவர்கள், 194 மாணவியர் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி போட்டி, பார்வையற்றோருக்கான ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், மென்பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டம், மென்பந்து எறிதல், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதவர்களுக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சரகத்திலிருந்து 506 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சீனு நாரயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர். போட்டிகளில், முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில், புது வாழ்வு உதவித் திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி, தருமபுரி மாவட்ட பாரா ஓலிம்பிக் தலைவர் சரவணன், உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment