26.10.2015, திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் (கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் மட்டும்) காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த காலிபணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் டிப்ளமோ பட்டயப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கல்வி தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் மற்றும் சீனியர் டிப்ளமோ பட்டயப்படிப்பு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தாள் 2–ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
மேற்கண்ட கல்வி தகுதியை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்குள் நேரில் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment