FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 5, 2015

வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அறிவிப்பு


சிவகங்கை: 04 October 2015
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என, காலாண்டுதோறும் கணக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதரவகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது. மேலும், நடப்பு காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தை நாளது தேதி வரை குறிப்புகளிட்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகைநிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் உள்ள புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மனுதாரர்கள்,தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டைமற்றும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வந்து, உடனடியாக இத்திட்டத்தில் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment