14.10.2015, திருப்பூர்:
"பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில், சமையலராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஆண்களுக்கு, 14; பெண்களுக்கு, 10 சமையலர் பணியிடம் காலியாக உள்ளன. தமிழில் எழுதப்படிக்க தெரிந்த, சைவம், அசைவம் சமைக்க தெரிந்தவர்கள், இப்பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.விடுதிகளில் முழு நேரம் பணியாற்ற விரும்பும், 30 வயது வரையுள்ளவர்களும்; 32 வயது வரையிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்; 35 வயது வரையிலான, ஆதிதிராவிடர், பழங்குடியினரும், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி, முன்னுரிமை விவரம் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம், ரேஷன் கார்டு எண், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், தேவையான ஆவண நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். நியமனம், நேர்காணல் மூலம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment