தேனி, 04 October 2015
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அக்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீ., சக்கர நாற்காலி ரேஸ் ஆகிய தடகளப் போட்டிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இறகுபந்து, மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெறும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள், கையுந்து பந்து குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.
மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும், பந்து எறியும் குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.
செவித் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டம், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் மற்றும் கபடிப் போட்டி நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. சக்கர நாற்காலி ரேஸில் கலந்து கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மற்றும் குழுக்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் தலா ஒரு விளையாட்டு வீரர், சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment