FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 12, 2015

பெங்களூருவில் அக்.14-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரு, 11 October 2015
பெங்களூருவில் அக்.14-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு சார்பில் பெங்களூரு, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவனில் அக்.14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் தகவல்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கேனிக்கல் துறைகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 7-ஆம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். வேலைதேடி வருவோர் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும் என்று மாநில சிறுபான்மைப்பிரிவுத் தலைவர் சையது அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment