FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 12, 2015

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

வங்கிகளின் வங்கி என்றழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. தற்போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 'கிரேடு-பி' அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 67 இடங்களும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1985 மற்றும் 1-10-1994 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எம்.பில் மற்றும் பி.எச்டி. படித்தவர்கள் 32 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். இதில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-10-2015.
இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.rbi.org.in என்ற இணையத்தை பார்க்கலாம்.

நபார்டு வங்கி

தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சுருக்கமாக 'நபார்டு' வங்கி என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் 'டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 24 மாநில கிளைகளில் மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 7 பணியிடங்கள் உள்ளன. இடஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 56 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 31-7-15 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றோர் ரூ.50-ம் மற்றவர்கள் ரூ.450-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் முன்னதாக இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

30-10-15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment