திருநெல்வேலி, 28 October 2015
பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் 266 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கைகாள் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதோர் என 4 பிரிவுகளாக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி, நின்ற நிலையில் குண்டு எறிதல் உள்ளிட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 266 பேர் பங்கேற்றனர்.
போட்டியினை திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, வணிகவரித்துறை இணை ஆணையர் கார்த்திகாயினி ஆகியோர் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. பிராங்க்பால்ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment