27.10.2015, புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த நிதியுதவியை ஏற்க பாகிஸ்தானை சேர்ந்த எதி தொண்டு நிறுவனம் மறுத்து விட்டது.
சிறுவயதில், இந்தியாவில் இருந்து, வழி தவறி பாகிஸ்தான் சென்ற, மாற்றுத் திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியா திரும்பினார். நரேந்திர மோடி, நேற்று மாலை கீதாவை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த, 'எதி பவுண்டேஷனுக்கு' ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக, பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுத்துவிட்டது. எந்த நிதி மற்றும் நன்கொடையை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அந்த நிறுவனம், நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அந்த நிதியை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு பயன்படுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment