திருச்சி, 28 October 2015
திருவெறும்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 31-ம் தேதி நடைபெறுகிறது.
திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளனர்.
இதுநாள்வரை தேசிய அடையாள அட்டை பெறாத திருவெறும்பூர் வ்டடாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 3 புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடனும், ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment