FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, October 8, 2015

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடாசலம் தகவல்

08.10.2015, தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.300. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,. பட்டம், முதுநிலை பட்டம் பதிவு செய்தவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 30-9-2015ம் தேதி படி 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வருமானத்தில் உச்சவரம்பு இல்லை. படிப்பினை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்.

அல்லது பெற்றோர், பாதுகாவலர், கணவர், மனைவி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோர் தனியார், எவ்விதமான சம்பளம் பெறும் பணியிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. தினமும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவராக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூர கல்வி கற்போருக்கு பொருந்தாது.ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை பெற்று வருபவர்கள், 3 வருட வேலை வாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெறுவோர் வர வேண்டியது இல்லை.

இத் தகுதி உடையோர் உதவித்தொகை பெற தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அனைத்து கல்விச் சான்று, வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment