ஈரோடு, 12 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் இரா.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்தி:
மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதில் குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறும். கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறு வாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை இவற்றில் ஏதேனும் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.
கை கால் ஊனமுற்றோர் பிரிவில், கால் ஊனமுற்றோருக்கு 1.50 மீ. ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், கை ஊனமுற்றோருக்கு 100 மீ ஓட்டமும், குள்ளமானோருக்கு 50 மீ ஓட்டமும், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படும்.
பார்வையற்றோர் பிரிவில், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ ஓட்டமும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும், முற்றிலும் பார்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும் நடைபெறும்.
மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில், 50 மீ ஓட்டம், 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், காதுகேளாதோர் பிரிவில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெறும்.
இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment