ஒசூர், 08 October 2015
ஒசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணையைத் தொடக்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கீழகொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014 டிசம்பர் 25-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் அவரது புகாரை ஏற்க மறுத்த போலீஸார், பின்னர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில், மாற்றுத் திறனாளி சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிப்பதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆவணங்களை உடனே சி.பி.சி.ஐ.டி.-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அக்.5-ஆம் தேதி, இவ் வழக்கின் ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை கொடக்கரை கிராமத்தில் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் அன்புமணி மற்றும் போலீஸார் கொண்ட 10 பேர் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment