திருநெல்வேலி, 28 October 2015
ஓவியக் கலையில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் ஓவிய நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாக ஓவியர் சந்துரு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஓவியர் சந்த்ரு அளித்தப் பேட்டி: ஓவியம் பயில விரும்புவோர் சென்னை, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓவியக் கலையில் ஆர்வமுள்ள தென்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் அவ்வை முளரி நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் அடிப்படை கல்வி கற்கின்றனர். தொடர்ந்து உயர்கல்வி பயிலாமல், கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இக்கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஓவியக் கலை பயில்வோருக்கு உலக அளவில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் ஓவியர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இயல்பாக நம்மை சுற்றியுள்ள இயற்கையினை நேசிக்க வேண்டும். மனிதனை சுற்றியுள்ள சூழலை ஓவியங்களாக பதிவு செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை வன வளங்கள் போன்ற மனதுக்கு பிடித்த இடங்கள் அமையந்துள்ளன. இன்றைய சூழலில் பள்ளிகளில் கூட ஓவியர் ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகிறது.
எனவேதான், ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. 3 வருட டிப்ளமோ படிப்பும், ஒரு வருட படிப்பும் உள்ளது. இதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 15 பேர்
உள்பட 20 பேர் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, திரைப்பட இயக்குநர் ஜனநாதன், திரைப்பட எடிட்டர் லெனின், தமிழ்பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி. ரமேஷ்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment