கடலூர், 21 October 2015
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் காலியாகவுள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான பதிவுதாரர்களின் பட்டியல் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
துணை விடுதிக் காப்பாளர் பணிக் காலியிடத்துக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்போடு காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
இதற்கான உச்சபட்ச வயது வரம்பு 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிய நிலையில் பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு வயது வரம்பும் கிடையாது. மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அக்.27ஆம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment