FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, October 24, 2015

பாகிஸ்தானில் இருந்து DEAF கீதா 26ம் தேதி வருகிறார் : வெளியுறவுத்துறை தகவல்

24.10.2015, புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து கீதா நாளை மறுதினம் (26ம் தேதி) இந்தியா அழைத்து வரப்படுவதை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று உறுதி செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயதுச் சிறுமி கீதா தனியாக அமர்ந்திருந்தார். அவருக்கு காதும் கேட்கவில்லை. பேசவும் முடியவில்லை. கீதாவிடம் ராணுவத்தினர் விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின், அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட கீதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி வருகிறார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற புதிதில், பெற்றோரைப் பிரிந்த நேபாள நாட்டுச் சிறுவனை அவனது பெற்றோரிடம் சேர்த்து வைத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீதா விஷயம் வெளியானது. 

பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதற்குப் பின், கீதாவை இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், வரும் 26ம் தேதி கீதா இந்தியா திரும்புவார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதியோடு தெரிவித்தார். இந்தியா வரும் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தி, உண்மை இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment