FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 12, 2015

புதுக்கோட்டையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.12–
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதுவாழ்வுத்திட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மற்றும் 1611 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை வழங்கியும் பேசியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்பொழுது புதுவாழ்வு திட்டம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து அன்னவாசல் மற்றும் விராலிமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 22 முன்னணி நிறுவனங்களும், 5 உள்ளுர் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று சுமார் 3000 இளைஞர்கள் வருகை புரிந்ததில் புதுவாழ்வு திட்டப் பகுதியிலிருந்து 727 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி சான்றிதழ்

மேலும், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மகளிர் குழுக்களுக்கு தொழிற்கடன் உதவி, 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வட்டியில்லா தனிநபர் தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் கணினி,ஜே.சி.பி, சி.என்.சி., லேப் டெக்னிஷியன், நர்ஸிங், பேருந்து நடத்துனர் பயிற்சி பெற்ற மகளிர், ஓட்டுனர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் என 264 அன்னவாசல் பகுதி நபர்களுக்கும், 620 விராலிமலை பகுதி நபர்களுக்கும் என மொத்தம் 1611 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்ற மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை திரட்டப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு அதிகமான அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மேலும் இதே பகுதியிலுள்ள 50 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் விரைவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக அரசு வழங்கும் இத்தகைய வாய்ப்புகள் மூலம் வேலைவாய்ப்பு ஆணைகளை பெறும் நபர்கள் இதனை உரிய முறையில் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.வசுமதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.சி.ராமையா, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், அன்னவாசல் ஒன்றியக்குழுத்தலைவர் இளவரசிவசந்தன், ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயநாதன், அப்துல்ரஹீம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment