சேலம்:
சேலம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய அடையாள அட்டை, தகுதியுடைய மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அரசின் பல்வேறு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த அட்டை பெறுவதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில், அரசு மருத்துவமனை டாக்டர் குழு மூலம், கண், காது, கை, கால், மனநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வில், 40 சதவீதம் மற்றும், அதற்கு மேல் மாற்றுத்திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு, இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, முடக்கு கருவி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 'சேலம் மாவட்டத்தில், இதுவரை, தேசிய அடையாள அட்டையை, 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்' என, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment