லக்னௌ, 27 October 2015
பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய மாற்றுத்திறனாளிப் பெண் கீதாவை, தங்களது மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வந்த மாற்றுத்திறனாளி பெண் கீதா நேற்று இந்தியா திரும்பினார். ஏற்கனவே அவரை தங்களது மகள் என்று கூறியுள்ள பிகாரைச் சேர்ந்த ஜனார்த்தன் மஹதோ தம்பதியரை, தனது பெற்றோர் இல்லை என கீதா கூறியிருந்த நிலையில், அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்ராஜ் கௌதம் - அனரா தேவி தம்பதி, கீதா தங்களது காணாமல் போன மகள் என்று சொந்தம் கொண்டாடி உள்ளனர். அவர்கள் அலகாபாத் காவல்துறை ஆணையரிடம் தங்களது மனுவை அளித்துள்ள நிலையில், மகளைக் காண தில்லி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment