இந்தூர், அக்.29-
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று அவர் அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா திரும்பினார்.செல்லும் இடம் எங்கும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கீதாவுக்கு தங்கள் அன்பை வாழ்த்துக்களாக தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியிருக்கும் கீதா, நேற்று இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் அபிநயம் செய்து, தன்னைப் போன்ற குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பரிசாய் பெற்றார்.
இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா பஞ்சாபி வர்மா, கீதா தேசிய கீதத்தை இப்படிப் பாடுவது இதுவே முதல் முறை என்றும், கீதாவை இங்குள்ள சூழலுடன் ஒன்றச் செய்வதே எங்கள் தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment