FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 21, 2015

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர், 21 October 2015
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். இதில், சுமார் 520 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காது கேளாதோருக்கான தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், உருளைக் கிழங்கு சேகரித்தல், பாட்டில் நிரப்புதல், நீளம் தாண்டுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், போன்ற போட்டிகளும், கை, கால் ஊனமுற்றோருக்கான 50, 75 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மன வளர்ச்சி குன்றியோருக்கான 25, 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், புற உலகு சிந்தனையற்றவர்களுக்கான (ஆட்டிஸம்) பந்து எறிதல், உருளைக் கிழங்கு சேகரித்தல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் (தஞ்சாவூர்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் டி. சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment