பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர் மாதம் 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை வீரபத்ரப்பா உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குமரவர்மன் முன்னிலையில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தி,போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.மேலும் சிறுமி முன்பு தங்கி இருந்த ஓசூர் காப்பகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:
Post a Comment