17.10.2015ஈரோடு:
ஈரோடு மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ஈரோடு கொங்கு அறிவாலயம் மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி, சக்திதேவி அறக்கட்டளை சிறப்பு பள்ளி, ஆர்.என்.புதூர், மாற்றுத்திறனாளி நலத்துறை காது கேளாதோர் அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட, ௧௦ சிறப்பு பள்ளிகளில் இருந்து, 150க்கும், மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கை, கால், ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதவர் என தனித்தனியாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறுவோர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
தவறி விழுந்த மாணவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கான போட்டிகளை நடத்தும்போது, முன்னெச்சரிக்கையாக மருத்துவகுழு இருக்க வேண்டும். ஆனால் நேற்று நடந்த போட்டியில், மருத்துவக்குழு எதுவும் இல்லை. ஓட்டப்பந்தயத்தில், சில மாணவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

No comments:
Post a Comment