தூத்துக்குடி, 18 October 2015
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர்), பட்டதாரி ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர்), துணை விடுதி காப்பாளர் (பார்வையற்றோர்), மற்றும் துணை விடுதி காப்பாளர் (காதுகேளாதோர்) பணி காலியிடங்களுக்கான பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தயார் செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மற்றும் வயது வரம்பு உடைய பதிவுதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அக். 29 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.லிட் பட்டப்படிப்புடன் நங்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச் ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணைவிடுதி காப்பாளர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க் க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1.07.2015 அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment