அலிகார், 29 October 2015
சிறு வயதில் காணாமல் போன நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இளம்பெண் கீதா, தங்களது மகள் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியர் புதிதாக உரிமை கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர், கீதா தங்களது மகள் எனக் கூறியிருந்த நிலையில், புதிய தம்பதியர் உரிமை கோரியிருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம்பெண் கீதா தனது 8-ஆவது வயதில் பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தன்னந்தனியாக தவித்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அங்குள்ள அறக்கட்டளை ஒன்றின் பராமறிப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வந்த கீதாவை மத்திய அரசு அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
அந்தப் பெண் தங்களது மகள் என பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர் உரிமை கோரினர். இதையடுத்து, அவர்களது மரபணு மாதிரிகளையும், கீதாவின் மரபணு மாதிரியையும் சேகரித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் அருகேயுள்ள உத்ரா கிராமத்தைச் சேர்ந்த பாகுல் சிங் என்பவர், சிறு வயதில் காணாமல் போன தனது மகள் டோலிதான் கீதா என்று உரிமை கோரியுள்ளார்.
இதை நிரூபிக்கும் வகையில் மரபணு சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீதா தங்களது மகள் என அடுத்தடுத்து புதிய புதிய தம்பதியர் சொந்தம் கொண்டாடுவதால் அவருடைய உண்மையான பெற்றோர் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

No comments:
Post a Comment