பெரம்பலூர், அக்.8-
பெரம்பலூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. அதன்படி கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படவுள்ளது. மேலும் குழுப்போட்டிகளில் பேட்மிண்ட்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 5 நபர்களும், டேபிள் டென்னிஸ் பிரிவில் 2 நபர்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் பார்வையற்றோர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டிகளில் வாலிபால் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இதில் ஒரு குழுவிற்கு 7 நபர்கள் கலந்¢து கொள்ள வேண்டும்.
நுண்அறிவுதிறன் தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், நுண்பிரிவு திறன் தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டியில் ஒரு பிரிவில் 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.
காது கேளாதோர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 200 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டமும், குழுப்போட்டிகளில் கபடி பிரிவில் 7 நபர்களும் பங்கு பெறலாம். மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க வயதுவரம்பு இல்லை. ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்¢பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment