08.10.2015, கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2010 அக்டோபர், 1ம் தேதி முதல், 2010 டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து, தற்போது, 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ், 2 வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள், நடப்பு காலாண்டில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெறுவதற்கு, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதள அடையாள அட்டை ஆகியவற்றுடன், அலுவலக வேலை நாட்களில் பதிவுதாரர்கள் மட்டுமே நேரில் வந்து, கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்து, அந்த விவரங்களை வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை வரும், 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை அளிப்பது நிறுத்தப்படும். உதவித்தொகை பெற்று, 3 ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுயஉறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும். மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகையை பெறவில்லை என, அந்த அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment