கடலூர், 06 October 2015
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகை சில வட்டங்களில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவோரை உதவித்தொகை தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் அணுகும் போது வங்கிகளுக்கும், தபால் நிலையத்துக்கும் அலைய விடுகின்றனர். இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், உதவித்தொகை மாதந்தோறும் அதிகபட்சம் 10-ஆம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், செயலர் பொன்.சண்முகம், பொருளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

No comments:
Post a Comment