16.10.2015, கடலுார்:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராகவும், அல்லது செவிப்புலன் இழந்தவராக இருந்து கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது படிப்பவராக இருக்கக் கூடாது. அஞ்சல் வழிக்கல்வி, தொலைதுாரக் கல்வி படிப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment