01.10.2015
சிங்கப்பூர், அடுத்த 7 ஆண்டுகளில் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அழகுக்கலை உள்ளிட்ட துறைகளில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் குடிசை வாழ் பகுதியில் உள்ள ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு 12 துறைகளில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கில் கவுன்சில் தலைவராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பது கேஸ்வானி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 19 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் 12 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், பயிற்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை பது கேஸ்வானி சிங்கப்பூரில் இன்று நடந்த ஹியூமன் கேப்பிடல் மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment